பொது செய்தி

தமிழ்நாடு

'புதிய வேலைவாய்ப்புகளை தொழில்நுட்பம் ஏற்படுத்தும்'

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சென்னை : ''தொழில் நுட்பங்கள் வாயிலாக, புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்,'' என, மத்திய வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர், பியுஷ் கோயல் கூறினார்.

இந்திய தொழில் துறை கூட்டமைப்பும், எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, 'மாறிவரும் பொருளாதார சூழல்; திறன் அறிதல் மற்றும் உருவாக்குதல்' என்ற தலைப்பில், இணைய வழி கருத்தரங்கை நேற்று நடத்தின.இந்த கருத்தரங்கில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது: தொழில்நுட்ப மாற்றத்தை படிப்படியாக மேற்கொள்ள முடியும். அதை ஏற்றுக் கொள்ளும் வகையில், மக்களை தயார்படுத்த, அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, நாம் தொழில் நுட்பத்திற்கும், மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப முடியும்.

பட்டதாரிகள் நாட்டின் எதிர்காலத்தையும், அதன் போக்கையும் மாற்றும் முக்கியமான நிலையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் தலைவிதியையே மாற்றும் வல்லமை பெற்றவர்கள்.உலகமயமாக்கலில், உலகின் போட்டிகளை எதிர்கொள்ள, புதிய தொழில்நுட்ப திறன்களை வளர்த்து கொள்வது பலனளிக்கும். நம் போட்டி திறன்களை வலுப்படுத்திக் கொள்ளவும், உற்பத்தி திறனை உயர்த்தவும், நாம் முயற்சி மேற்கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் வாயிலாக, வேலை வாய்ப்பையும், புதிய பணி வாய்ப்புகளையும் ஏற்படுத்த முடியும் என, நம்புகிறேன்.சமூக பொருளாதார சமத்துவத்திற்கு அடிகோலும், ஜனநாயக முறையிலான வளர்ச்சிக்கு, தொழில்நுட்பம் பெருமளவில் உதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X