தமிழ்நாடு

கவலை: பருத்தி விலை வீழ்ச்சியால் விவசாயிகள்...குறைந்தபட்ச ஆதார விலை எதிர்பார்ப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 கவலை:  பருத்தி விலை வீழ்ச்சியால் விவசாயிகள்...குறைந்தபட்ச ஆதார விலை எதிர்பார்ப்பு

கடலுார்; பருத்தி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், கடலுார் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதியில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

காவிரி பாசன பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு, பருவ மழை பொய்த்தது போன்றவற்றால் மூன்று போக சாகுபடி, ஒரு சில ஆண்டுகளாக ஒரு போக சாகுபடிக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. அதனால், ஆழ்குழாய் அமைத்து மின் மோட்டார் மூலம் உறுதியான சாகுபடி செய்கின்றனர்.கடலுார் மாவட்டத்தில் காவிரி பாசன பகுதிகளில் குறுவை, சம்பா, நவரை என மூன்று போக நெல் சாகுபடியும், சில இடங்களில் குறுவை சம்பா என இரண்டு போக நெல் சாகுபடி மற்றும் மூன்றாம் போகத்தில் பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.

பருத்தி சாகுபடிநெல் சாகுபடியில் ஊடுபயிராக உளுந்து, பயிறு வகை பயிர்கள் சாகுபடி செய்த நிலையில் போதிய விலை இல்லாததால், கூடுதல் வருவாய்க்கு, கோடைக் காலத்தில் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு வறட்சியை தாங்கி வளரக்கூடிய பருத்தியை ஆர்வமாக மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.குறுவை நெல் சாகுபடியை விடுத்து, ஆழ்குழாய் கிணறு, மின் இணைப்பு, மின் மோட்டார், நிலத்தடி நீர் வசதிகள் இருப்பதால் பிப்ரவரி மாதம் விதைத்து ஜூன் மாத இறுதியில் அறுவடை செய்யும் வகையில் பருத்தியை சாகுபடி செய்கின்றனர்.பருத்தியை பொறுத்தவரையில் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்சஆதார விலையின் அடிப்படையில், பஞ்சு இழையின் தரம்,பஞ்சு இழையின் முதிர்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்திய பருத்தி கழகம் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்கிறது. பருத்தி இழை நீளம் மற்றும் இழையின் தரத்தை பொருத்து, குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ. 5450 முதல் ரூ. 5,550 வரை நிர்ணயம் செய்துள்ளது. ஈரப்பதத்தை பொருத்து விலை குறைக்கப்படுகிறது. இதில், 8 சதவீதம் ஈரப்பதம் உள்ள பருத்திக்கு ரூ. 5,450; 12 சதவீதம் ஈரப்பத பருத்திக்கு குறைந்தபட்சமாக ரூ. 5,232 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. எப்படி இருந்தாலும், குவிண்டால்ரூ. 5000க்கு குறையாமல் விலைபோகும்.விலை வீழ்ச்சிகடலுார் மாவட்டத்தில், ஈரப்பதம் மற்றும் தரத்தை பார்க்காமல் ரூ.3,800 விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் வாங்குகின்றனர். கடந்த ஆண்டு பருத்தி விளைச்சலும் அதிகம் இருந்தது. விலையும் கிலோ ரூ. 54 வரை கொள்முதல் செய்தனர். இந்த ஆண்டு விளைச்சலும் குறைவாக உள்ளது. கொள்முதல் கிலோவிற்கு ரூ. 38 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

காவிரி பாசன விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது: தர நிர்ணயம் செய்ய கருவிகள் ஏதுமின்றி, வியாபாரிகள் பருத்தி இழை விலை நிர்ணயம் செய்கின்றனர். தரம் குறைவாக இருந்தால் ஆய்வு செய்து, எவ்வளவு தரம் குறைந்தது என விவசாயிகளிடம் கூற வேண்டும். ஈரப்பதம் கூடுதலாக இருந்தால் காயவைத்து கொண்டு வர அறிவுரை வழங்க வேண்டும்.

மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு கண்காணிப்பு அலுவலர்கள் விலை நிர்ணயத்தில்வெளிப்படை தன்மையை உறுதிபடுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த ஆதார விலைக்கு இணையாக பருத்திக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X