பொது செய்தி

தமிழ்நாடு

கமல் வீட்டில் நோட்டீஸ்: மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : நடிகர் கமல் வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட நோட்டீஸ் ஒட்டிய ஊழியரை, மூன்று மாதமாக பணியில் சேர்க்க மறுப்பது குறித்து, மாநகராட்சி கமிஷனர் பதிலளிக்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் வினோத்குமார். இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:நான் எட்டு ஆண்டுகளாக, சென்னை மாநகராட்சியில், மலேரியா நோய் தடுப்பு பிரிவில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறேன். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என்பதற்கான நோட்டீசை கொடுத்து, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள, நடிகர் கமலின் வீட்டு முகவரியில் ஒட்டும்படி, சுகாதார ஆய்வாளர் முத்து ரத்தினவேல் கூறினார்.மன உளைச்சல் அதன்படி, கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினேன். பின், நோட்டீசை கிழிக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்; உடனே நோட்டீசை அகற்றினேன்.

இதுதொடர்பாக, மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிகுமார் விசாரணை நடத்தினர். அப்போது, 'நோட்டீசை யார் கொடுத்து ஒட்டச் சொன்னது?' என, கேட்டார். 'மண்டல நல அலுவலர் சரஸ்வதி, சுகாதார ஆய்வாளர் முத்து ரத்தினவேல், சுகாதார அலுவலர் லட்சுமணன் ஆகியோர் ஒட்ட சொன்னார்கள்' என்றேன். 'விசாரணை முடிந்து பணியை தொடரலாம்' என்றார்.வழக்கம் போல என்னுடைய வார்டு, 123ல், வருகை பதிவேட்டில் கையொப்பமிட சென்றேன். சுகாதார ஆய்வாளர், '15 நாட்கள் உன்னை பணி நீக்கம் செய்துள்ளேன்' என்றார். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளானேன்.அனுமதிக்கவில்லைமாநகராட்சி சுகாதார இணை கமிஷனர் மதுசூதன் ரெட்டியிடம் புகார் அளித்தேன்.

அவரும் பணியை தொடரும்படி கூறிய நிலையில், வார்டு அலுவலகத்தில் கையொப்பமிட அனுமதிக்கவில்லை.என் வருமானத்தை மட்டுமே நம்பி, குடும்பம் உள்ளதால், அதிகாரிகள் செய்த தவறை மறைக்க, என்மீது பழி சுமத்த பார்க்கின்றனர். மூன்று மாதமாக பணி வழங்கவில்லை. எனக்கு அதே இடத்தில், மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரித்த ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய நோட்டீசில், 'நடிகர் கமல் வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என, நோட்டீஸ் ஒட்டிய மாநகராட்சி ஒப்பந்த பணியாளரை, பணியில் சேர்க்க அனுமதி மறுப்பது குறித்து, நான்கு வாரங்களில், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202007:39:06 IST Report Abuse
Bhaskaran கமல் கட்சிக்கு ஆயிரம் விளக்கு தொகுதிக்கு வேட்பாளர் கிடைத்துவிட்டார்
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202005:03:44 IST Report Abuse
Girija போய் கமலக்கண்ணன் ஏ ஈ அஸ்சி (ஸ்டனட்) போலீஸ் கமிஷனர் ரேங்க் அய்யாவை, சீ சீ அண்ணனை பார்த்து மறுபடி எப்படி திரும்பி வேலைக்கு, அதே இடத்தில சேரணும்னு கேட்டு தெரிஞ்சுக்கோ. போ போ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X