சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாமதமின்றி நிவாரணம் வழங்க கோரிகடலுாரில் மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

கடலுார்; கட்டுமானம் மற்றும் முறைசாரா நல வாரியம் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் களுக்கு, தாமதமின்றி நிவாரணம் வழங்க கோரி,மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மா. கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழகத்திற்கு கொரோனா பாதிப்பை சமாளிக்க மத்திய அரசு ரூ.12 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும். பி.சி.ஆர். பரிசோதனை இயந்திரம் கடலுார், விருதாச்சலத்தில் அமைக்க வேண்டும்.தொடர் ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு மத்திய அரசு தலா ரூ. 7500, மாநில அரசு ரூ. 5000 வழங்க வேண்டும். கட்டுமானம், முறைசாரா நல வாரியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் களுக்கு அறிவித்த நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் மாவட்டத்தில் 300 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டசெயலாளர் ஆறுமுகம், மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், நகர செயலாளர் அமர்நாத் பங்கேற்றனர்.விருத்தாசலம் பெரியார் நகரில் வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிதம்பரம் வடக்கு வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் ராஜா, மாநிலக் குழு உறுப்பினர் மூசா, நகர்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, கோபால் பங்கேற்றனர்.புவனகிரி பாலக்கரை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலர் சதானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகர செயலர் மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.வேப்பூர் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வட்டக்குழு உறுப்பினர் சோமு, மாவட்ட குழு உறுப்பினர் சிவஞானம், நிர்வாகிகள் கனகராஜ், இளையராஜா, கொளஞ்சிநாதன், மணிகண்டன் பங்கேற்றனர். நல்லுார், நகர், கண்டப்பங்குறிச்சி, சேப்பாக்கம், தே.புடையூர், ஆதியூர் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X