பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட் விவகாரம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சிதம்பரம்; நகராட்சி ஊழியரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி நகராட்சி அலுவலகம் எதிரில் தி.மு.க.,வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகராட்சியில் கடந்த மாதம் நடந்த ஆண்டு தணிக்கையின் போது ஒப்பந்ததாரர்களின் பணி டிபாசிட் தொகையில் ரூ. 8 லட்சத்திற்குமேல் இரு முறை வரவு வைத்திருந்தனர். இதனால் ஒப்பந்ததாரர்களின் பட்டியலை அதிகாரிகள் சரி பார்த்து, தவறுதலாக வரவு வைத்த பணத்தை திருப்பி செலுத்துமாறு எழுத்து மூலம் தெரிவித்தனர். இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் சண்முகசுந்தரம், ரஜினிகாந்த் ஆகியோர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக செலுத்தினர். இந்த தகவல் ஊழியர்கள் மூலமாக, சமூக வலை தளத்தில் பரவியது. இதை சில வெளியாட்கள் நகராட்சி மண்டல அலுவலகத்திற்கு தெரிவித்தனர்.விசாரணையில், இந்த பிரச்னைக்கு காரணமான கிளார்க் அசோக்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிதம்பரம் கமிஷனருக்கு, நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் முஜிபூர் ரகுமான் உத்தரவிட்டார்.இதையடுத்து கிளார்க் அசோக்குமாரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சுரேந்தர்ஷா நேற்று உத்தரவிட்டார். இந்த பிரச்னைக்கு நான் காரணமில்லை என கூறி, சஸ்பெண்ட் உத்தரவை அசோக் குமார் வாங்க மறுத்தார்.இந்நிலையில் , அசோக்குமாருக்கு ஆதரவாக தி.மு.க., முன்னாள்கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜய ராகவன், அப்பு சந்திரசேகரன்,வெங்கடேசன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் 20 க்கும் மேற்பட்டோர் நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷாவை சந்தித்து, இதற்கு காரணமான அதிகாரியைசஸ்பெண்ட் செய்யாமல், கிளார்க்கை சஸ்பெண்ட் செய்வது ஒரு தலைப்பட்சமானது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்களிடம், உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் தெரிவிக்கிறேன் என கமிஷனர் சுரேந்தர்ஷா கூறினார். இதையடுத்து தி.மு.க.,வினர் திரும்பி சென்றனர்.முன்னாள் கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவன் கூறுகையில், அசோக்குமார் மீது எடுத்த சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறாவிட்டால் நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.களையெடுக்க கோரிக்கைநிதி நெருக்கடியில் சிக்கிய சிதம்பரம் நகராட்சியில் வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஊழியர்கள் இரவு பகல் பாராமல் செய்து வருகின்றனர். இங்குள்ள ஊழியர்கள் சிலர் இரு கோஷ்டிகளாக பிரிந்து நகராட்சி செயல்பாடுகளை வெளி ஆட்களுக்கு தெரிவித்து, அவர்கள் மூலமாக உயரதிகாரிகளுக்கும் பொய் தகவல்களையும் கூறி, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஊழியர்களை களையெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X