ஆரம்ப  சுகாதார நிலையம் மூன்று நாட்களுக்கு மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப  சுகாதார நிலையம் மூன்று நாட்களுக்கு மூடல்

Added : ஜூலை 23, 2020
Share

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆரம்ப சுகாதார நிலையம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் கடை வீதியில் உள்ள இரு வியாபாரிகளுக்கு தொற்று உறுதியானது. நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரிந்த செவிலியருக்கு தொற்று உறுதியானது.இதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றால் பாதித்த ஒருவர் சிகிச்சை பெற்றதாக கிடைத்த தகவலால் சன்னதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கொரோனா தொற்று பரவி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X