கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்

Added : ஜூலை 23, 2020
Share
கடலுார்; கடலுார் முதுநகரில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 150 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.கடலுார் முதுநகர் மீன் மார்க்கெட் அருகில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் சுகந்தன் தலைமையில், அலுவலர்கள் சந்திரசேகரன், கொளஞ்சியப்பன் ஆய்வு செய்தனர்.அப்போது, கடைகளில் கார்பைட் கல், ரசாயன திரவம் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள்

கடலுார்; கடலுார் முதுநகரில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 150 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.கடலுார் முதுநகர் மீன் மார்க்கெட் அருகில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் சுகந்தன் தலைமையில், அலுவலர்கள் சந்திரசேகரன், கொளஞ்சியப்பன் ஆய்வு செய்தனர்.அப்போது, கடைகளில் கார்பைட் கல், ரசாயன திரவம் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தனர். அந்த கடைகளில் ஆய்வு செய்து ஒரு கிலோவிற்கு அதிகமான ரசாயன கல், பாட்டில்களில் ரசாயன திரவங்களை கைப்பற்றினர். பழுக்க வைத்த 150 கிலோ மாம்பழங்கள் மற்றும் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுத்தனர். இந்த மாம்பழங்களை நகராட்சி ஊழியர்கள் மூலம் கைப்பற்றி அழிக்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X