வண்டல் மண்ணின் முக்கியத்துவம் விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வண்டல் மண்ணின் முக்கியத்துவம் விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுரை

Added : ஜூலை 23, 2020
Share

கடலுார்; தென்னம்பாக்கம் கிராமத்தில், வண்டல் மண்ணின் முக்கியத்துவம் குறித்து வேளாண்மை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.மண்வளத்தை பெருக்கும் விவசாயிகள் ஏரிகள், கால்வாய்கள் மற்றும் அணைகளில் படிந்துள்ள களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்து பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம் பொது பணித்துறை, நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 241 நீர் நிலைகள், கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 547 நீர் நிலைகள், பேருராட்சிக்கு உட்பட்ட 77 நீர் நிலைகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட 19 நீர்நிலைகள் உட்பட 884 நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண் மற்றும் களி மண்ணை இலவசமாக எடுத்து பயன்படுத்த கலெக்டர் அனுமதியளித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ 16 ஆயிரம் விவசாயிகள் வண்டல் மண் எடுத்து பயன் பெற்றுள்ளனர். நிலங்களை சீரமைக்க ஏரி வண்டல் மண்ணை நிலத்தில் இட்டு பயன்படுத்த வேளாண்மை துறை சிபாரிசு செய்கிறது. நடப்பு ஆண்டில் ரெட்டிச்சாவடி அருகே திருப்பணாம்பாக்கம் மற்றும் தென்னம் பாக்கம் கிராமங்களில் ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள்.இதையடுத்து தென்னம்பாக்கம் கிராமத்திற்கு, கடலுார் வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன் சென்று, மண் பரிசோதனைபடி இயற்கை உரம், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் உயிர் உரங்கள், ரசாயன உரங்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் ரஜினிகாந்த், புஷ்பேந்திரன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X