பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதலாக இரு பரிசோதனை மையங்கள்: கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தகவல்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலமாக மாறாமல் தடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு மாவட்ட நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கவும், தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்த 12 குழுக்கள் அமைத்து 2500 களப்பபணியாளர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு பணி நடந்து வருகிறது.இது தொடர்பாக கலெக்டர் சந்திரசேகர சகாமுரி அளித்த பேட்டி:சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மற்றும் சென்னைக்கு மாதிரிகள் அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. கால தாமதத்தை தவிர்க்க, ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரியில் கூடுதலாக ஒரு பரிசோதனை இயந்திரம் மற்றும் கடலுார் அரசு மருத்துவ மனையில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கும் பரிசோதனை துவங்கும். அதனால் தினமும் 1500 மாதிரிகள் வரையில் பரிசோதனை செய்ய முடியும்.மாவட்டத்தில் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க, போதுமான படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்தப்பட்டோர் தங்க முகாம்கள் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் விடுதிகள் தயாராக உள்ளன.இது வரை 4 கட்ட ஊரடங்கு முடிந்துள்ளது. கடைகளை அடைப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது.பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X