சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணைத் தலைவர்கள் குறுக்கீடுஊராட்சித் தலைவர்கள் புகார்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

கடலுார்; ஊராட்சியில் துணைத் தலைவர் குறுக்கீடு உள்ளதால் பணி செய்வதில் இடர்பாடு ஏற்படுவதாக, கலெக்டரிடம் விருத்தாசலம் ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.விருத்தாசலம் ஒன்றியக்குழு தலைவர் செல்லதுரை தலைமையில் ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் அமிர்தலிங்கம், வீரபாண்டியன், அண்ணாதுரை, ராஜலட்சுமி, ஜெயந்தி உள்ளிட்டோர் கலெக்டரை சந்தித்து அளித்த மனு:ஊராட்சிகளில் துணைத் தலைவர்கள் குறுக்கீடு மற்றும் ஆதிக்கம் செலுத்துவதால், பணிகள் செய்வதில் இடர்பாடு ஏற்படுகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணிகளை ஊராட்சி தலைவரின் ஒப்புதலோடு நடத்த வேண்டும்.தொகுப்பு வீடுகள் கட்டுவதைபழைய நடைமுறையில் இருந்ததை போல் ஊராட்சி தலைவர்களின் பங்களிப்புஅவசியம் இருக்க வேண்டும்.ஊராட்சி தலைவர்களின் அனுமதி பெற்ற பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு வண்டல் மண் அடிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். அரசு திட்ட பணிகளை செய்து, அதன் மூலம்கிடைக்கும் பணம் ஊராட்சி செயலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.அந்த பணத்தை தலைவர்களின் வங்கி கணக்கில் வைக்க வேண்டும். கிராம புறங்களில் உள்ள உடல் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X