எச் - 1பி விசா நிறுத்தத்தை எதிர்த்து அமெரிக்க அமைப்புகள் வழக்கு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : அமெரிக்காவில் வேலை பார்க்க, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும், எச்-1பி விசா உள்ளிட்ட விசாக்கள் வழங்குவதை நிறுத்தும் உத்தரவை எதிர்த்து, பல அமெரிக்க தொழில் அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு, எச்1பி விசா உட்பட பல்வேறு விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதை, இந்தியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.'கொரோனா வைரஸ் பரவலால், அமெரிக்கர்கள் கோடிக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். 'அவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வேலை பார்க்க வருவோருக்கான விசாக்கள், இந்தாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படும்' என, அமெரிக்க அரசு, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளது.

இதை எதிர்த்து, அமெரிக்க வர்த்தக சபை, தேசிய உற்பத்தியாளர்கள் சங்கம் உட்பட பல அமெரிக்க தொழில் அமைப்புகள், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளன. அவை, தங்கள் மனுக்களில் கூறியுள்ளதாவது:தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் தேவையான நிபுணத்துவம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மூலமே கிடைத்து வருகிறது. அவர்களால் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.இந்நிலையில், விசாக்கள் வழங்குவது நிறுத்தப்படுவதால், பல்வேறு தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், அமெரிக்காவில் செய்யப்படும் முதலீடுகள் குறையும், வேலை வாய்ப்புகள் உருவாக்குவதும் குறையும். நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தற்போதுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை நியமிக்க தடை விதிக்கும் வகையில் உள்ள அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.'195 ஆண்டுகளாகும்'வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையிலான மசோதா, அமெரிக்க பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது நடந்த விவாதத்தின்போது, செனட் சபை, எம்.பி.,யான மைக் லீ பேசியதாவது:அமெரிக்காவில் இருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, நிரந்தரக் குடியுரிமை அளிக்கும் வகையில், 'கிரீன் கார்டு' வழங்கப்படுகிறது.

இதில், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. தற்போதுள்ள நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், இதற்கு விண்ணப்பித்தால், அவருக்கு கிரீன் கார்டு கிடைப்பதற்கு, 195 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X