ஏரியில் கழிவுநீர்: சுகாதார சீர்கேடு| Dinamalar

ஏரியில் கழிவுநீர்: சுகாதார சீர்கேடு

Added : ஜூலை 23, 2020
Share

சின்னசேலம்; சின்னசேலம் நகர பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.சின்னசேலம் ஏரி 355 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியின் நீர் மூலம் சுற்றுப் பகுதிகளில் உள்ள 1000 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில், சின்னசேலம் நகர பகுதிகளான அம்சாகுளம், விஜயபுரம், காந்தி ரோடு, மூங்கில்பாடி ரோடு, மேட்டுத் தெரு, கடை வீதி உட்பட 30க்கும் மேற்பட்ட தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலக்கிறது.இதனால், அப்பகுதியை சுற்றி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு தொற்று பரவும் அபாயம்உள்ளது.மழைக் காலங்களில் கழிவுநீரோடு, தண்ணீரும் சேர்ந்து அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுவதால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக கிணறுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளைகிணறுகளில், கழிவுநீர் கலந்து உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.தற்போது சின்னசேலம் ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 90 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி, மதகுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதேபோல் ஏரியில் கலக்கும் கழிவுநீரை, நேரடியாக ஏரியில் விடாமல் சுத்திகரிப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X