இனவெறி பிடித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது ஜோ பிடன் ஆவேச குற்றச்சாட்டு

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன் : ''அமெரிக்க அதிபர்களில், இனவெறியுடன் செயல்படும் முதல் அதிபர் டொனால்டு டிரம்ப் தான்,'' என, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அமெரிக்காவில், வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் மந்தநிலையில் உள்ளது.ஆனாலும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இருவரும், தங்கள் ஆதரவாளர்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று, அமெரிக்க சேவைத் துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, ஜோ பிடன் பங்கேற்றார்.

அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், 'அமெரிக்காவில் இந்த கொரோனா பாதிப்பு காலத்திலும் இனவெறி அதிகமாக உள்ளதே...' என, கேள்வி எழுப்பினார். அதிக முக்கியத்துவம் இதற்கு பதில் அளித்து, ஜோ பிடன் பேசிய தாவது:அமெரிக்க அதிபர்களிலேயே, இனவெறியுடன் செயல்படும் முதல் அதிபர் டிரம்ப் தான்.இதற்கு முன் இருந்த எந்த அதிபரும், இவ்வளவு அதிகமான இனவெறியுடன் செயல்பட்டது இல்லை. குடியரசு கட்சியிலேயே, டிரம்பை தவிர, வேறு எந்த அதிபரும் இனவெறிக்கு இவ்வளவு அதிக முக்கியத்துவம் அளித்தது இல்லை.ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர்களாக பதவி வகித்த எவரும் இனவெறியுடன் செயல்பட்டது இல்லை.

கொரோனா வைரசை, சீன வைரஸ் என, டிரம்ப் விமர்சிக்கிறார். மக்களை, அவர்களது நிறத்தின் அடிப்படையிலும், பூர்வீகத்தின் அடிப்படையிலும், கையாளும் போக்கை, டிரம்ப் பின்பற்றுகிறார். எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர், இனவெறியுடன் செயல்பட்டது உண்டு; ஆனால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலர், அதிபராகவும் முயற்சித்தனர். அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. இவ்வாறு, அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து, டிரம்பின் ஆலோசகர் கத்ரினா பியர்சன் கூறியதாவது:அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பின மக்களுக்காக, ஆபிரகாம் லிங்கனுக்குப் பின், டிரம்பை தவிர, வேறு எந்த அதிபரும் அதிகமான திட்டங்களை செயல்படுத்தியது இல்லை. சிறுபான்மை மக்களுக்காகவும் பல நல்ல திட்டங்களை டிரம்ப் அறிவித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
24-ஜூலை-202012:20:45 IST Report Abuse
hasan , நல்ல காம்பினேஷன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X