பொது செய்தி

தமிழ்நாடு

பருத்தி வார சந்தையில் நடப்பாண்டு ரூ.12.78 கோடிக்கு பஞ்சு மூட்டை கொள்முதல்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தையில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான ஓராண்டில் 12.78 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பருத்தி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சந்தைக்கு அடரி, கைகளத்துார், பொரசக்குறிச்சி, விருகாவூர், ரிஷிவந்தியம், புக்கிரவாரி உள்ளிட்ட விழுப்புரம், கடலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.டிசம்பர் முதல் மார்ச் வரை பருத்தி அறுவடை காலம் என்பதால் அதிகப்படியான வரத்து இருக்கும். அதன்படி கடந்த 2019 ஏப்ரல் முதல் மார்ச் வரை நடந்த பருத்தி சந்தையில் 9,909 விவசாயிகள் கொண்டு வந்த 70 ஆயிரத்து 844 மூட்டைகளில் இருந்த 3 லட்சத்து 17 ஆயிரத்து 315 குவிண்டால் பஞ்சு 12.78 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டு, மார்ச் 25ம் தேதி துவங்கி கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஏப்ரல், முதல் ஜூன் வரையிலான வர்த்தகத்தில் மேலும் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்திருக்கும் எனவும், ஆனால் இந்த ஆண்டு பருத்தி சந்தையின் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 12 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி விற்பனை சங்க மேலாண் அலுவலர் சஞ்சீவி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X