கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வருமான சான்று வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சென்னை : 'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்படும் வருமானம் மற்றும் சொத்து சான்றிதழை, மற்ற மாநிலங்களில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து, மத்திய அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீத ஒதுக்கீடு, மத்திய அரசு வழங்கி உள்ளது. இதற்காக விண்ணப்பிப்பவர்கள், வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.ஜூன், 4ல், மாவட்ட கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் பிறப்பித்த உத்தரவில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களுக்கு, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் அளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், ரெட்டி நல சங்க நிர்வாகி கிருபாகரன், அகில பாரத பிராமணர் சங்கத் தலைவர் குளத்துமணி, தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.ரெட்டி நல சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.சுரேஷ், ''மத்திய அரசு பணிகள் மற்றும் கல்வி வாய்ப்புக்காக மட்டும், சான்றிதழ் வழங்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ''மற்ற மாநிலங்களிலும், இந்த சான்றிதழை பயன்படுத்தலாம் என, அரசுக்கு உத்தரவிட வேண்டும்,'' என்றார். இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, 'மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான், மாநில அரசு சான்றிதழ் வழங்குகிறது. மற்ற மாநிலங்களில் இதை பயன்படுத்த முடியுமா என்பதை, மத்திய அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்' என்றார்.

உடனே, வழக்கறிஞர் என்.சுரேஷ், ''இந்த வழக்கில் மத்திய அரசும் இருப்பதால், இதை தெளிவுபடுத்தலாம்,'' என்றார். இதையடுத்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க ஏதுவாக, விசாரணையை, வரும், 30ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X