பொது செய்தி

தமிழ்நாடு

அதிர்ச்சி: ஆந்தராக்ஸ் நோயில் இறக்கும் மாடுகளால் விவசாயிகள்...விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசம்பட்டில் ஆந்தராக்ஸ் பாதிப்பால் கால்நடை அடுத்தடுத்து இறப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு மாடுகளை இறைச்சிக்கு விற்பனை செய்ய கூடாது என கால்நடைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.கள்ளக்குறிச்சி பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதேபோன்று, விவசாயத்தை சார்ந்துள்ள மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.மழை பெய்தவுடன், அணைகள், ஏரிகள் மற்றும் காய்ந்து கிடக்கும் விளை நிலங்களில் புற்கள் செழித்து வளர்ந்து காணப்படும். அத்தருணத்தில், மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் ஆந்தராக்ஸ் நோய் தாக்குதலால் பாதிப்படைந்து இறந்து போவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து வருகிறது.முன்னெச்சரிக்கையாக மழை பெய்து முடிந்தவுடன் கால்நடைக்கு ஆந்தராக்ஸ் தடுப்பூசி போட்டிருந்தால், நோய் தாக்குதலைக் கட்டுபடுத்த முடியும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நோய் பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, கால்நடைத் துறையினர் அந்த ஊர்களில் முகாமிட்டு, தடுப்பூசி போடுகின்றனர்.இந்நிலையில், சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில், கடந்த 16ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஆந்தராக்ஸ் நோய் பாதிப்பால் 10க்கும் மேற்பட்ட மாடுகள் அடுத்தடுத்து இறந்துள்ளன.இதனையறிந்த, விழுப்புரம் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சாந்தி, கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பெரியசாமி ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், அரசம்பட்டு கிராமத்தில் 500 மாடுகளுக்கு ஆந்தராக்ஸ் தடுப்பூசி போடப்பட்டது.தொடர்ந்து, சுற்று வட்டார பகுதிகளிலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில், ஆந்தராக்ஸ் பாதிப்பில் ஆண்டுதோறும் கால்நடைகள் இறப்பது தொடர்ந்து வரும் நிலையில், வரும் காலங்களில் மீண்டும் இதுபோன்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையுடன் கால்நடைத் துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்.ஆந்தராக்ஸ் நோய் பாதிப்பால் இறக்கும், மாடுகளை பள்ளம் தோண்டி புதைக்க வேண்டும். ஆனால், கால்நடை வளர்ப்போர் சிலர், இறந்த மாடுகளை அறுப்புக்கு விற்பனை செய்து விடுகின்றனர். ஆந்தராக்ஸ் நோய் பாதிப்பால் இறக்கும் மாடுகளின் இறச்சிகளை உண்ணுவதால், மனிதர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். நோய் பாதிப்பில் மாடுகள் இறந்தால், அது குறித்து கால்நடைத் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்து விடுவதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதனைத் தவிர்க்க கால்நடைத்துறை அதிகாரிகள் கிராமங்களில் முகாமிட்டு தடுப்பூசி போடுவதுடன் இதுகுறித்த விழிப்புணர்வையும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகளிடையே ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X