இந்தியா, ஜப்பானுடன் இணைந்து பதிலடி: சீனாவுக்கு அமெரிக்க எம்.பி., எச்சரிக்கை

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

வாஷிங்டன் : 'சீனாவால் ஏற்படும் பிரச்னைகளை, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து, சரியான பதிலடி கொடுப்போம்' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ராணுவத்தில், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியாவை ஏற்க, பார்லிமென்டில் மசோதா கொண்டு வந்தவர், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி எம்.பி., மார்க் வார்னர். இவர். அமெரிக்க - இந்திய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:சீனாவில் வர்த்தகம் செய்வதில், அமெரிக்க நிறுவனங்களுக்கு, சீன அரசு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.மேலும், அமெரிக்கா உட்பட பல நாடுகளிலிருந்த ரகசிய தகவல்களை திருடும் பணியிலும், சீனா ஈடுபட்டுள்ளது.

கொரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதற்கு சீனா தான் காரணம் என, சொல்லத் தேவையில்லை. சீனாவால் ஏற்படும் பிரச்னைகளை, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து, அமெரிக்கா, சரியான பதிலடியை கொடுக்கும். சீனாவில் முதலீடு செய்துள்ள அமெரிக்க நிறுவனங்களை, இந்தியாவில் முதலீடு செய்ய வைக்க, இதுதான் சரியான நேரம்.சீனாவின் நியாயமற்ற வர்த்தக செயல்பாடுகளால், இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள நடு மற்றும் குறு மின்னணு நிறுவனங்கள், பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளன.சீனாவில், தொழிலாளர் உட்பட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறி, இந்தியாவில் தொழில் துவக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், பேசிய அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும், அமெரிக்க நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேறி, இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர். சர்வதேச பங்குதாரராக இந்தியா'கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் மருந்துகளை, 100க்கும் அதிகமான நாடுகளுக்கு வழங்கி, சர்வதேச பங்குதாரர் என்பதை, இந்தியா நிரூபித்துள்ளது' என, அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்து கூறினார். இந்திய - அமெரிக்க வர்த்தக கவுன்சில் மாநாட்டில் அவர் பேசியதாவது:நெருக்கடி, பிரச்னைகளின் முடிவில், நல்ல வாய்ப்புகள் உருவாவது வழக்கம்.

இப்போது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியும், புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளது. மேலும், இது போன்ற நெருக்கடிகளை எதிர்கொள்ள, உலக நாடுகள், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காலத்தில், தொற்று கட்டுப்படுத்தும் மருந்துகளை, அமெரிக்கா உட்பட, 100க்கும் அதிகமான நாடுகளுக்கு வழங்கி, இந்தியா சாதனை படைத்துள்ளது.இதன் மூலம், நம்பிக்கைக்குரிய சர்வதேச பங்குதாரர் என்பதை, இந்தியா நிரூபித்துள்ளது. இவ்வாறு, சந்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X