கடைக்காரர்களின் அலட்சியம் தொற்று அதிகரிக்கும் அபாயம்| Dinamalar

கடைக்காரர்களின் அலட்சியம் தொற்று அதிகரிக்கும் அபாயம்

Added : ஜூலை 23, 2020
Share
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பகுதியில் காய்கறி கடைக்காரர்களின் அலட்சியத்தால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.கொரோனா பரவல் காரணமாக கள்ளக்குறிச்சியில் காய்கறி கடைகள் மற்றும் மேல் அக்ரகார கடைகள் மூடப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 20 நாட்களுக்குப்பிறகு காய்கறி மார்க்கெட் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நோய் தடுப்பு பணிக்கான எந்த ஒரு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பகுதியில் காய்கறி கடைக்காரர்களின் அலட்சியத்தால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.கொரோனா பரவல் காரணமாக கள்ளக்குறிச்சியில் காய்கறி கடைகள் மற்றும் மேல் அக்ரகார கடைகள் மூடப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 20 நாட்களுக்குப்பிறகு காய்கறி மார்க்கெட் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், நோய் தடுப்பு பணிக்கான எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் மேல் அக்ரகாரம் பகுதி கடைக்காரர்கள் கடைபிடிப்பதில்லை.அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைக்காரர்கள் பொருட்களை சாலையின் நடுப்பகுதி வரை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். கடைகளுக்கு முன் பெயிண்ட்டால் கட்டம் போடவில்லை. இதனால் கடைகளில் பொருட்களை வாங்க வருபவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.இதனை நகராட்சி அதிகாரிகளும், சுகாதாரத் துறையினரும் கண்டு கொள்ளவில்லை. முறையான பாதுகாப்புடன், சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X