ஆப்கானில் தாக்குதல் 14 பேர் பலி

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

காபூல் : ஆப்கானிஸ்தானில், அரசு படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், குழந்தைகள் உட்பட, 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கும், தலிபான் அமைப்பிற்கும் இடையே, கடந்த பிப்ரவரி மாதம், ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 5,000 தலிபான் கைதிகளை விடுவிக்கும் பட்சத்தில், தலிபான்களிடம் சிக்கியுள்ள பாதுகாப்புப் படையினரை விடுவிப்பது என, முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, மே மாதம், முதற்கட்டமாக, 900 தலிபான்கள் விடுவிக்கப்பட்டனர்.அதைத் தொடர்ந்து, அவ்வப்போது தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலிபான் பயங்கரவாதி குலாம் நபி என்பவர், நேற்று விடுவிக்கப்பட்டார். ஹெராட் மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரில், அவரை வரவேற்க, நுாற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருந்தனர். அப்போது, அரசு படைகள் திடீரென்று வான்வழித் தாக்குதல் நடத்தின. இதில், மக்கள், 14 பேர், உயிரிழந்தனர். பலியானோரில் பெரும்பாலானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள். குலாம் நபியின், 9 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக, உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து, ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வான்வழித் தாக்குதல் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது' என்றார்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க துாதர் ஜால்மே கலீல்ஜாத், ''ஹெராட் மாகாணத்தில், அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், குழந்தைகள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளது, புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுஉள்ளது. ''இதை, வன்மையாக கண்டிக்கிறோம். விசாரணையை வரவேற்கிறோம்,'' என்றார். இதையடுத்து தலிபான் அமைப்பு, நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'அரசு படைகளின் இது போன்ற தாக்குதல், விடுதலையாகி இருக்கும் தலிபான்களை, மீண்டும் ஆயுதம் எடுக்க துாண்டும் வகையில் உள்ளது.'ஆகையால், இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X