பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவக்கல்லுாரி கட்டுமானப் பணிகள்கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஆய்வு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்ட 381.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 4ம் தேதி நடந்தது.அதனைத் தொடர்ந்து, 20 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக்கல்லுாரி, 700 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை, விடுதி மற்றும் மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பு உட்பட பல்வேறு வசதிகளுடன் கட்டுமானப் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.இப்பணிகளை கலெக்டர் கிரண் குராலா நேற்று ஆய்வு செய்தார். மருத்துவக் கல்லுாரிக்கான வரைபடத்தை பார்வையிட்டு, கூடுதலாக இடம் ஒதுக்கீடு செய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். தொடர்ந்து கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட முகாமாக மாற்றப்பட்டுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள படுக்கைகள், ஆக்ஸிஜன் பைப் ஆகியவற்றினை பார்வையிட்டார்.ஆய்வின்போது தனிமைப்படுத்தப்பட்ட முகாம் முதன்மை அதிகாரி டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை மருத்துவ பணிகள் செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், மாலா, ராஜேஷ், வெங்கடேசன், தாசில்தார் (பொறுப்பு) பிரபாகரன், மண்டல துணை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், ஒப்பந்ததாரர்கள் செல்வம், பெரியசாமி, பி.டி.ஓ., ராஜேந்திரன், வி.ஏ.ஓ., திவ்யா உட்பட பலர் உடனிருந்தனர்.'த்ரீ பேஸ்' மின் இணைப்பு தேவைகட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் கிராமத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரத்திற்கு மட்டுமே 'த்ரீ பேஸ்' மின் இணைப்பு கிடைக்கிறது. இதனால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.எனவே ரோடுமாமாந்துாரில் இருந்து கட்டுமானப் பணி நடைபெறும் இடம் வரை மின் இணைப்பு கொடுத்து, தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து 24 மணி நேரமும் 'த்ரீ பேஸ்' மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X