பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையத்தை சொந்த கட்டடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சின்னசேலத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2011ம் ஆண்டு புதிய தீயணைப்பு நிலையம் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டது. இங்கு 8க்கும் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தீயணைப்பு நிலையம் துவங்கி 9 ஆண்டுகள் ஆன நிலையில் சொந்த கட்டடம் இன்றி வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்கள் ஓய்வு எடுப்பதற்கும், தீயணைப்பு மீட்பு உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் வைப்பதற்கும் போதிய இட வசதியின்றி சிரமப்படுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம், சின்னசேலத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு அனைத்து வசதிகளுடன் சொந்த கட்டடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X