பொது செய்தி

தமிழ்நாடு

முழு அடைப்பு: கடைவீதி வெறிச்சோடியது

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சின்னசேலம்; கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சின்னசேலத்தில் கடைகள் அடைக்கப்பட்டதால், பொதுமக்கள் நடமாட்டமின்றி கடைவீதி வெறிச்சோடியது.சின்னசேலம் தாலுகாவில் மட்டும் 160க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது சிறப்பு முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து, நகர பகுதிக்கு வரும் மக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருந்தது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மளிகை, மெடிக்கல் ஷாப்களின் உரிமையாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனையடுத்து, மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முன்தினம் 23ம் தேதி முதல் வரும் 26ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வணிகர் சங்கம் சார்பில் அறிவித்திருந்தனர்.அதனைத் தொடர்ந்து, மெடிக்கல் ஷாப், வங்கிகள் தவிர மற்ற அனைத்து கடைகள் வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம், மூங்கில்பாடி ரோடு, கடைவீதி ஆகிய இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X