பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் 22 பேருக்கு தொற்று

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை பகுதியில் நேற்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.உளுந்துார்பேட்டை பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடுகின்றனர்.இந்நிலையில், மீனாட்சிபுரம், பாரிவள்ளல் தெரு, பச்சையப்பா தெரு, காயிதேமில்லத் தெரு, சேலம் மெயின் ரோடு, சிவன் கோவில் தெரு, எலவனாசூர்கோட்டை, கிளியூர், கொணலவாடி, மதியனுார், பரிக்கல், பாதுார் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் எனவும், களமருதுார் கிராமத்தில் 3 பேருக்கு என 15 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.இதேபோன்று, உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்று சோதனை செய்ததில், 7 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் ஒரே நாளில் 22 பேருக்கு உறுதியானது.நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, சுகாதாரத் துறையினர் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X