பொது செய்தி

இந்தியா

குணமடைந்தோர் 63.18 சதவீதம் பேர்!

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுடில்லி : கடந்த, 24 மணிநேரத்தில், கொரோனா வைரசால், 45 ஆயிரத்து, 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்; 29 ஆயிரத்து, 557 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில், இவ்வளவு அதிகமானோர் குணம் அடைந்திருப்பது, இதுவே முதன்முறையாகும்.

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா வைரசால் புதிதாக, 45 ஆயிரத்து, 720 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12 லட்சத்து, 38 ஆயிரத்து, 635 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில், 29 ஆயிரத்து, 557 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை, ஏழு லட்சத்து, 82 ஆயிரத்து, 606 பேர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம், 63.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. நான்கு லட்சத்து, 26 ஆயிரத்து, 167 பேர், சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில், கொரோனா வைரசால், 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக தமிழகத்தில், 518 பேரும், மஹாராஷ்டிராவில், 280; ஆந்திராவில், 65; கர்நாடகாவில், 55; மேற்கு வங்கத்தில், 39; உத்தர பிரதேசத்தில், 34; டில்லியில், 29 பேரும் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நாட்டில் வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 29 ஆயிரத்து, 861 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.ஒரே நாளில், இவ்வளவு அதிகமானோர் குணமடைந்திருப்பது, இதுவே முதன்முறையாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X