பொது செய்தி

தமிழ்நாடு

நடமாடும் ஆவின் பால் வண்டி முகவர்களாக ஆட்டோ, டாக்சி டிரைவர்கள்

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : கொரோனா பேரிடர் காலத்தில், ஆட்டோ, டாக்சி டிரைவர்களை, நடமாடும் பால் வண்டி முகவர்களாக, ஆவின் நிறுவனம் நியமித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில், ஆட்டோ மற்றும் டாக்சி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க, அவர்கள், ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் விற்பனை செய்ய, ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.முதல் கட்டமாக, திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள், நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா காலத்திற்கு முன், முகவர்கள் ஆவதற்கு, 10 ஆயிரம் ரூபாய், வைப்புத் தொகை இருந்த நிலையில், தற்போது, 1,000 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதனால், புதிதாக, 575 முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகம் முழுதும், வாழ்வாதாரம் இழந்துள்ள, ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களை, நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்த, ஆவின் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.விருப்பம் உள்ளவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள, ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில், 1,000 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தி, நியமனம் பெற்றுக் கொள்ளலாம். மாதம், 15 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல், வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. இவ்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என, ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202007:39:56 IST Report Abuse
Bhaskaran நல்ல காரியம் பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X