வளர்ச்சிக்கு உந்து சக்தியாக வட கிழக்கு திகழும்: மோடி

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
PM, Modi, பிரதமர், மோடி, வளர்ச்சி, உந்து சக்தி, வட கிழக்கு

புதுடில்லி : ''நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உருவெடுக்கும் ஆற்றல், வட கிழக்கு மாநிலங்களுக்கு உள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில், 3,054 கோடி ரூபாய் செலவில், இரண்டு லட்சத்து, 80 ஆயிரத்து, 756 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


வேலைவாய்ப்பு


இவ்விழாவில் அவர் பேசியதாவது: இத்திட்டம், மணிப்பூரின், லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். இனி, குடிநீருக்காக பெண்கள் வெகு துாரம் செல்ல வேண்டியதில்லை. அடுத்த, 22 ஆண்டுகளுக்கு மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் விதத்தில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவர்.

மத்திய அரசு, வட கிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து பகுதிகளையும் இணைக்கும் சாலைகள், ரயில் வழித் தடங்கள், விமான நிலையங்கள் நவீனமயமாக்கம் என, பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அசாமில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த, வன்முறை ஒழிந்தது.

மணிப்பூரில், போக்குவரத்தை தடை செய்வது, கடந்த கால வரலாறாக மாறிப் போனது. திரிபுரா, மிசோரமில் கூட, இளைஞர்கள் வன்முறையை கைவிட்டுள்ளனர். புரு-ரியங் அகதிகளின் வாழ்க்கை, மேம்பட்டு வருகிறது.கொரோனா காலத்திலும், அரசு பணிகள் முடங்காமல் செயல்பட்டு வருவதற்கு, இந்த குடிநீர் திட்டம் ஒரு உதாரணம். கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வரை, அந்நோய்க்கு எதிராக நாம் போராட வேண்டும். அத்துடன், வளர்ச்சிப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும்.


தேசிய மூங்கில் திட்டம்


தற்சார்புக் கொள்கைப் படி, உள்ளுர் பொருட்களின் மதிப்பை கூட்டுவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும், சிறிய தொழில்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு, வேளாண் உள்ளிட்ட தொழில்களுக்கான, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும்.இந்தியாவில், அகர்பத்திகளுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால், அதற்கான குச்சிகளுக்கு, நாம் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து, மூங்கில்களை வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்கிறோம்.

இதை மாற்றி, உள்ளூரிலியே அதிக அளவில் மூங்கில்களை உற்பத்தி செய்யும் வல்லமை, வட கிழக்கு மாநிலங்களுக்கு உள்ளது. இதற்காக மிகப் பெரிய முதலீட்டில், தேசிய மூங்கில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, வடகிழக்கு மாநில இளைஞர்களுக்கும், வலைதளங்களில் புதுமையான தொழில்களை செய்யும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும்.

விளையாட்டு பல்கலைக் கழகத்தை ஏற்படுத்தி, உலகத் தரத்தில் மிகப் பெரிய விளையாட்டு மைதானத்தை அமைத்ததன் மூலம், மணிப்பூர், விளையாட்டு வீரர்களுக்கான முக்கிய மையமாக உருவெடுத்து உள்ளது. மொத்தத்தில், நாட்டின் வளர்ச்சிக்கான உந்துசக்தியாக திகழும் ஆற்றல், வட கிழக்கு மாநிலங்களுக்கு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
24-ஜூலை-202022:03:42 IST Report Abuse
sankaseshan தமிழக போலி ஊடகங்களின் தவறான ஒருசார்பு செய்திகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட தமிழர்கள் மோடி அரசு செய்யும் வளர்ச்சி பணிகளை ஒப்புக்கொள்ள மனம் வராது .
Rate this:
Cancel
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
24-ஜூலை-202019:02:25 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) ப்ளீஸ் ப்ளீஸ் CHOWKIDAR மோடி எழு வருடங்களில் என்ன நல்லது செய்துள்ளார் ஒன்று சொல், சவுக்கிடர் என்று சொல்லி அப்போ 42 பேர் பாகிஸ்தானிடம் இப்போ 20 பேர் சீனாவிடம் இது தான் CHOWKIDAR லட்சணம்
Rate this:
Cancel
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) - ஹிந்து என்று சொல்லும் தமிழன் ,இந்தியா
24-ஜூலை-202014:28:07 IST Report Abuse
பூணுல் போட முடியாத ஹிந்து (தமிழன்) அப்படி போடு போடு வாயால , CHINNATHAMBI பட தொடங்கிட்டார் நாடு மக்கள் எல்லோரும் நிம்மதியா தூங்கிடுவார்
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
24-ஜூலை-202015:46:57 IST Report Abuse
Chowkidar NandaIndiaநீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், பத்து வருடங்கள் வாயையே திறக்காமல் படம் காட்டி மக்களை வாட்டி வதைத்து அவர்கள் தூக்கத்தை தொலைக்க வைத்த மவுனகுருவை விட சிறப்பான ஆட்சி தரும் இவர் 100 மடங்கு மேல் தான். வயிற்றேரிச்சல் பட்டுக்கொண்டே இருக்க வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X