கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவத்துக்கு உரிய அங்கீகாரம் ஐகோர்ட்டில் மத்திய, மாநில அரசுகள் பதில்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுக்கு, ஆதரவையும், ஊக்குவிப்பையும் அளித்து வருவதாகவும், சித்த மருத்துவத்துக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இந்திய மருத்துவ முறையை பின்பற்றுவதாக, தமிழக அரசும் தெரிவித்துள்ளது.சித்த மருத்துவ சிகிச்சை அளித்து வந்த, டாக்டர் தணிகாசலம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்திய மருத்துவ முறைக்கு, மத்திய, மாநில அரசுகள் அங்கீகாரம் அளிப்பதில்லை' என, நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு, பல கேள்விகளையும் எழுப்பி இருந்தனர்.

அறிவிப்பு : இவ்வழக்கில், மத்திய அரசின் ஆயுஷ் துறை சார்பில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் கனகவள்ளி சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனு:சித்த மருத்துவத்துக்கு, ஆயுஷ் அமைச்சகம் உரிய அங்கீகாரம் வழங்கி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த, ஆயுஷ் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆயுஷ் அமைச்சகத்தின் உதவியுடன், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், சித்த மருத்துவர்களுக்கான வழிமுறைகளை பிறப்பித்துள்ளது.

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஓமியோபதி வழியாக, கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என, 2020 ஏப்ரலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக, கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளை, ஆயுஷ் அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. வைரஸ் தடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள, 50 லட்சம் ரூபாயை, ஆயுஷ் அமைச்சகம் ஒதுக்கி உள்ளது. வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கபசுர குடிநீர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மஞ்சள், மிளகு, அமுக்கரா அடங்கிய, சித்தா சத்து பானம், ஆயுஷ் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


இதன் முடிவுகள் வர வேண்டியுள்ளது.சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு, 10 ஆண்டுகளில், 237 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:கொரோனா வைரஸ் பாதிப்புக்கு, இந்திய மருத்துவ முறையில், சிகிச்சை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, இந்திய மருத்துவத் துறை இயக்குனர் தலைமையில், தமிழக அரசு குழு அமைத்தது. சிறப்பு திட்டம்அந்தக் குழு, அரசிடம் அறிக்கை அளித்தது. அதன்படி, 'ஆரோக்கியம்' என்ற, சிறப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

வைரஸ் பாதிப்புக்கு மருந்து எதுவும் இல்லாததால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி மற்றும் இயற்கை முறையிலான மருந்துகளை பயன்படுத்தும் படி அறிவிக்கப்பட்டது.பரிசோதனைக்காக மருந்து கொண்டு வருபவர்கள், மருந்தில் சேர்க்கப்பட்ட உள்ளீடுகள் பற்றி முழுமையாக தெரிவிப்பது இல்லை. அதனால், அதன் வீரியத்தை பரிசோதிக்க இயலவில்லை. எனவே, அவர்கள் விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இந்திய மருத்துவ முறை மருந்துகளை கொள்முதல் செய்ய, ஒவ்வொரு ஆண்டும், 23 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்குகிறது. இந்திய மருத்துவ முறையை மேம்படுத்த, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.கொரோனா வார்டு, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ளவர்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. எல்லா மாவட்டங்களிலும், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.விசாரணையை, வரும், 30ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X