பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவின்றி ரோட்டில் கிடந்தமுதியவரை மீட்ட போலீசார்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில் வயோதிகம் காரணமாக ஆதரவற்ற நிலையில் சாலை ஓரம் காயங்களுடன் படுத்திருந்த முதியவரை போலீசார் உதவியுடன் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். திண்டிவனம் செஞ்சி ரோடு, வேப்பஞ்சாலை பகுதி, ராஜாஜி வீதி ஆகிய பகுதிகளில் சுமார் 70 வயது மதிக்க தக்க முதியவர் தோளில் பலத்த காயத்துடன், நடக்க முடியாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக திரிந்துள்ளார். நிர்வாண நிலையில் கிடந்த முதியவரின் நிலையை கண்டு, யாரும் உதவி செய்யாமல் கடந்து சென்று வந்தனர். நேற்று காலை அந்த வழியாக ரோந்து சென்ற டி.எஸ்.பி.,சிறப்பு பிரிவில் பணியாற்றும் அய்யப்பன், செந்தில்முருகன் ஆகிய இருவரும், முதியவரின் பரிதாப நிலை கண்டு, அவருக்கு வேட்டி அணிவித்தனர்.அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர், அந்த முதியவர் தனக்கு தெரிந்தவர் எனவும், திண்டிவனம் திரவுபதி அம்மன் கோவில் அருகே விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.இதை தொடர்ந்து அந்த முதியவரை ஆட்டோவில் ஏற்றி, திரவுபதி அம்மன் கோவிலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசாரின் மனிதாபிமான செயலை அங்கிருந்து பொது மக்கள் பெரிதும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X