சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ., ஆபீசில் லஞ்ச ஒழிப்பு, 'ரெய்டு'

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஸ்ரீபெரும்புதுார் : குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம், படப்பையில் உள்ளது. இங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்களாக, அப்துல் நயீம் பாஷா, ராஜசேகர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், 10 பேர் அடங்கிய, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று மாலை, திடீர் சோதனை நடத்தினர்.மாலை, 3:00 மணிக்கு துவங்கி, இரவு 9:00 மணிக்கு மேல் நீடித்த சோதனையில், கணக்கில் வராத, 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், பல்வேறு ஆவணங்களை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றி, தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.பி.டி.ஓ.,க்கள் மற்றும் அலுவலர்களுக்கு, லஞ்ச பணம் கைமாற்றி கொடுத்த, தினக்கூலி பணியாளர் ஒருவரை பிடித்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202005:07:31 IST Report Abuse
Girija பகல்ல போயிருந்தா அம்பது லட்சம் கிடைச்சிருக்கும் . அது என்ன லஞ்சத்துறை உப்பு விக்க போனா மழை பேயுது , மாவு விக்க போனா காத்தடிக்குது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X