காட்சி பொருளாக கிரேப் மாஸ்டர் வாகனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காட்சி பொருளாக 'கிரேப் மாஸ்டர்' வாகனம்

Added : ஜூலை 23, 2020
Share

விழுப்புரம்; விழுப்புரத்தில் சுகாதார துறை மூலம் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக கிருமி நாசினி தெளிப்பதற்கு வாங்கியுள்ள இயந்திரம் பயன்படுத்தபடாமல் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் நகர பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிப்பு தீவிரமடைந்து வருகிறது. நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் அனைத்து அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள் ளனர். தீயணைப்பு, நகராட்சி உள்ளிட்டோர் தங்களின் வாகனங்கள் மூலம் தொற்று பாதித்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின் றனர்.மாவட்டங்களில் உள்ள சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு கிருமி நாசினியை மோட்டார் வாகனம் மூலம் தெளிப்பதற்காக 'கிரேப் மாஸ்டர்' (திராட்சை தோட்டங்களுக்கு பயன்படுத்துவது) எனும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த இயந்திரம் விழுப்புரத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகிறது. இருந்து இன்னும் பயயன்படுத்தாமல் காட்சி பொருளாக உள்ளது. கிருமி நாசினி தெளிப்பதற்கு பெரிய வாகனங்கள் செல்லமுடியாத இடங்களிலும் இந்த வாகனம் எளிதில் சென்றுவரும் என்பதால், விழுப்புரம் நகரில் விரைவாக இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X