சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை கடைக்காரரை கடத்திய 6 பேர் கைது

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

தஞ்சாவூர் : தஞ்சை அருகே, நகைக்கடை உரிமையாளரை கடத்திய வழக்கில், 'டிவி' நிருபர் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர், ஒரத்த நாடு அடுத்த காடுவெட்டி விடுதியைச் சேர்ந்தவர் சீமான், 50. ஊரணிபுரத்தில் வசித்து வரும் இவர், நகை கடை நடத்தி வருகிறார்.கடந்த, 21ம் தேதி கல்லணை கால்வாய் கரையில், 'வாக்கிங்' சென்ற சீமான் மாயமானார். சிலர் அவரை கடத்தி வைத்து, பணம் கேட்டு மிரட்டினர்.திருவோணம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவரை மீட்க, போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பயந்த கடத்தல்காரர்கள், சீமானை நேற்று முன்தினம் விடுவித்தனர். கடத்த கும்பலின் மொபைல் நம்பரை வைத்து, சீமானை கடத்திய, 32 - 58 வயது வரையுள்ள ஆறு ஆண்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்களில் ஒருவர், தனியார், 'டிவி' நிருபர். இவர்கள், சீமானை கடத்தி, 1 கோடி ரூபாய் பெற திட்டமிட்டது, விசாரணையில் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X