பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான பகுதியில் 'பாட்டில்நெக்' வளைவு: விபத்துக்களுக்கு அச்சாரமிடும் இணைப்பு ரோடு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 ஆபத்தான பகுதியில் 'பாட்டில்நெக்' வளைவு: விபத்துக்களுக்கு அச்சாரமிடும் இணைப்பு ரோடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சியை அடுத்துள்ள நெடுஞ்சாலையில், வாகனங்கள் கண்ணில் தெரியாத ஆபத்தான பகுதியில், 'பாட்டில்நெக்' வளைவு அமைந்துள்ளதால், விபத்து அபாயம் பல மடங்கு அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி, வடக்கிபாளையம் பிரிவு - நடுப்புணி ரோடு, மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரு மாநில இணைப்பு ரோடு என்பதால், கடந்தாண்டு தேசிய நெடுஞ்சாலை துறையில், மூன்று வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.
பணி முடிந்து சில மாதங்களிலேயே, பல இடங்களில் ரோடு பிளந்து, பணியின் தரத்தை கேள்விகுள்ளாக்கியது. ரோடு பிளக்கும் இடங்களை அவ்வப்போது 'பேட்ச் ஒர்க்' செய்து சமாளித்து வருகின்றனர்.இந்நிலையில், அதே ரோட்டில் ஆபத்தான பகுதியில் 'பாட்டில்நெக்' வளைவு அமைந்துள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகிறது. சங்கம்பாளையம் மேம்பாலத்தை கடந்ததும், ஆர்.பொன்னாபுரம் பிரிவு உள்ளது. இப்பகுதி, நான்கு ரோடுகள் சந்திப்பாக உள்ளது.உயரமான மேடு என்பதால், வாகன ஓட்டுனர்கள் பார்வைக்கு, எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், அப்பகுதியில் பல விபத்துகள் நடந்துள்ளன.
இந்நிலையில், ரோடு விரிவாகத்தின் போது, அகலப்படுத்தப்பட்டது. ஆனால், விபத்து அபாயமுள்ள பகுதியில் திடீரென குறுகி, 'பாட்டில்நெக்' வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விபத்து அபாயம் பல மடங்கு அதிகரித்துள்ளது.இதற்கு தீர்வாக, ரோடு குறுகும் இடத்தை அகலப்படுத்த வேண்டும்; நான்கு ரோடுகள் சந்திப்பில், விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரவுண்டானா அமைக்க வேண்டும்; எதிரே வரும், வாகனங்கள் தெரிவதில்லை என்ற எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.அப்பகுதியில், விபத்துகள் அதிகரிக்கும் முன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X