மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில் நுண்ணீர் பாசன திட்டத்திற்காக, ரூ.3.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் மூலம் சிறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும் இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் உமாசங்கரி அறிக்கை:மடத்துக்குளம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் அமைக்க, 547 ஹெக்டேருக்கு, ரூ.3.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பாசன வசதி இல்லாத இடங்களில், நீராதாரங்களை உருவாக்கி நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.பாசன நீர் ஆதாரங்களை உருவாக்க, டீசல் பம்ப்செட், மின் மோட்டார் பம்ப் செட் அமைக்க, 50 சதவீத மானியம், 15 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்படுகிறது. பாசன நீரை கொண்டு செல்லும் கட்டமைப்பு ஏற்படுத்த 50 சதவீத மானியத்தொகை, ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்படுகிறது.தரை நிலை நீர் தேக்க தொட்டி நிறுவ, 50 சதவீத தொகை, ஒரு கன மீட்டருக்கு, ரூ. 309க்கு மிகாமல் வழங்கப்படும். புதிய நீராதாரங்களை உருவாக்கும் இத்திட்டத்திற்காக, 33.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மானியமும், நுண்ணீர் பாசன முறையை பின்பற்ற முன்வரும், விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். மானிய தொகை முழுவதும் விவசாயிகள் சேமிப்பு கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.காரத்தொழுவு, துங்காவி, ஜோத்தம்பட்டி, தாந்தோணி, மைவாடி, கணியூர், மெட்ராத்தி, பகுதி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர், தாமோதரன் 96598-38787 குமரலிங்கம், சங்கரமநல்லூர், வேடபட்டி, கொழுமம், சோழமாதேவி, அ.கண்ணாடிப்புத்தூர், பாப்பான்குளம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர், ராஜசேகர் 86755-56865 என்ற எண்களில், தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.