பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி உரம் தயாரிப்பு மையத்தில் ஏழு டன் நுண் உரம் தயாரிப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சி அலுவலக கட்டுபாட்டில் உள்ள நுண்உரம் தயாரிப்ப மையத்தில் தயாரிக்கப்பட்ட 7 டன் உரம் விவசாயிக்கு அதிகாரிகள் விற்பனை செய்தனர்.விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள 42 வார்டுகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து பெறப்படும் குப்பைகளை சேகரிக்கும் பணிகளில், நகராட்சி துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இங்கு சேமிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை கொண்டு நுண் உரம் தயாரித்து அது விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக விழுப்புரம் நகராட்சி பகுதியில் 8 இடங்களில் நுண் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. மாம்பழபட்டு சாலையில் உள்ள நுண்உரம் மையத்தில், 50 டன் உரங்கள் விவசாய தேவைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், ஏழு டன் உரத்தை, திருவாமாத்துார் அடுத்த எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சார்லஸ் என்பவருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.இந்த உரத்தை, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மேற்பார்வையில், நகர்நல அலுவலர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் ரமணன், மேற்பார்வையாளர்கள் ஜெகன், இளங்கோ, கோபிநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.இங்கு ஒரு நாளைக்கு 1 முதல் 1.50 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரங்கள் கிலோ 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X