பொது செய்தி

தமிழ்நாடு

திறனாய்வில் தேர்ச்சி குறைவு: கல்வியாளர்கள் ஏமாற்றம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய திறனாய்வுத் தேர்வு, டிச., மாதம் நடந்தது.பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வு மையங்களில் 702 மாணவர்கள் தேர்வு எழுதினர்.இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், 500 ரூபாய் உதவித்தொகையாக, ஆண்டுதோறும், அவர்களின் மேல்நிலை வகுப்பு வரை வழங்கப்படுகிறது.உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இத்தேர்வில் அதிகமான மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என சிறப்பு வகுப்புகள் கடந்த கல்வியாண்டுக்கு முன்பு துவக்கப்பட்டது.இருப்பினும், தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உடுமலை கல்வி மாவட்டத்தில், 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 'மாணவர்களை இதுபோன்ற தேர்வுகளுக்கு தயார்படுத்த, கூடுதல் பயிற்சி தேவையாக உள்ளது; தற்போதைய தேர்ச்சி விகிதம் ஏமாற்றமளிக்கிறது,' என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X