பொது செய்தி

தமிழ்நாடு

1.5 ஆண்டுக்கு பின் மேட்டூர் அணையில் 'தலை' காட்டிய நந்தி

Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 1.5 ஆண்டுக்கு பின் மேட்டூர் அணையில் 'தலை' காட்டிய நந்தி

மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், 1.5 ஆண்டுக்கு பின், நந்தி சிலையின் தலை வெளியே தெரிந்தது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையின் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில், ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. நீர்மட்டம், 69 அடிக்கு மேல் உயரும்போது, கோவில் நந்தி சிலை மூழ்கி விடும். கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், அணை நீர்மட்டம், 69 அடிக்கு கீழ் சரிந்ததால், நந்தி சிலை வெளியே தெரிந்தது. மீண்டும் ஆகஸ்டில், நீர்மட்டம் உயர்ந்ததால், சிலை மூழ்கியது.இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்ததால், கடந்த மாதம், 12ல், 101 அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 67.54 அடியாக சரிந்தது.

இதனால், பண்ணவாடி நீர்பரப்பில் மூழ்கி இருந்த நந்தி சிலையின் தலை, நேற்று முழுமையாக வெளியே தெரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,352 கனஅடியாக இருந்த, அணை நீர்வரத்து, நேற்று, 5,081 கனஅடியாக அதிகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24-ஜூலை-202004:25:20 IST Report Abuse
NicoleThomson இந்த அணை கட்டிய பிறகு தமிழகத்தில் பல கழகங்கள் ஆட்சிக்கு வந்து சென்று விட்டன புதிய அணை ஏதாவது கட்டப்பட்டதா?
Rate this:
Girija - Chennai,இந்தியா
24-ஜூலை-202005:19:28 IST Report Abuse
Girijaநிறைய மல்டிப்ளெக்க்ஸ் வீடுகளை அவர்கள் கட்டிக்கொண்டார்கள்....
Rate this:
G.Krishnan - chennai,இந்தியா
30-ஜூலை-202015:40:58 IST Report Abuse
G.Krishnanநிறைய இணைவிகள், துணைவிகளை கட்டிக்கொண்டார்கள், அதனால் அணைகள் கட்டுவது பற்றி சிந்திக்க நேரம் இல்லாமல் போய்விட்டது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X