பொது செய்தி

தமிழ்நாடு

வாரச்சந்தை கடைகளில் சிறப்பு ஒதுக்கீடு :இயற்கை விவசாயிகளுக்கு இடம் கிடைக்க எதிர்பார்ப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 வாரச்சந்தை கடைகளில் சிறப்பு ஒதுக்கீடு :இயற்கை விவசாயிகளுக்கு இடம் கிடைக்க எதிர்பார்ப்பு

உடுமலை:பெதப்பம்பட்டி வாரச்சந்தையில், இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு, தனியாக கடைகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட, பெதப்பம்பட்டியில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. முன்பு, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில், எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.அரசுத்துறைகள் கட்டுப்பாட்டில் இல்லாமல், இயங்கிய சந்தையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, வாரச்சந்தைகளுக்கான கடைகள் கட்ட வருவாய்த்துறை சார்பில், இடம் தேர்வு செய்யப்பட்டது.பின்னர், 2019 ம் ஆண்டு இறுதியில், வாரச்சந்தைக்கான, 50 கடைகள் கட்ட, அரசு, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. செஞ்சேரிமலை ரோட்டில், புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை கடைகள் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.இந்நிலையில், புதிய வாரச்சந்தை வளாகத்தில், இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு தனியாக கடைகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது: பெதப்பம்பட்டி வாரச்சந்தையில், கடைகள் ஒதுக்கீட்டை, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எவ்வித ரசாயன உரங்களையும் பயன்படுத்தாமல், காய்கறிகளை விளைவிப்பவர்களுக்கு தனியாக கடைகள் ஒதுக்கினால், விவசாயிகளும், நுகர்வோரும் பயன்பெறுவார்கள். இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பபட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X