கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் தாலுகாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட அரகண்டநல்லுார்,மணம்பூண்டி,வீரபாண்டி ஆகிய பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள், தடுப்பு பணிகள் குறித்தும், சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் ஜெயலட்சுமி,டாக்டர் சுகுமாறன் ஆகியோரிடம் விசாரித்தார்.அதனைத்தொடர்ந்து சென்னகுணம்,ஒதியத்துார் ஆகிய கிராமப்பகுதிகளில் நடைபெற்று வரும் மருத்துவமுகாம்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின் பச்சையம்மன் கோவிலில் கடைபிடிக்கப்படும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். இதில் டாக்டர்கள் ராஜேஷ், ஜோஸ்பிரேம்குமார், இன்ஜினியர் அன்பழகன், ஓவர்சீயர் செந்தில், ஊராட்சி செயலாளர்கள் அசோக்குமார்,ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE