பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் வீணாகாமல் சேமிக்க 9 தடுப்பணைகள் அமைப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:கொல்லபட்டி சுற்றுப்பகுதி ஓடைகளில், 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஒன்பது தடுப்பணைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் கொல்லபட்டி, ஆலாம்பாளையம், ஆவலப்பம்பட்டி பகுதியில், மழை நீர் பெருக்கெடுத்து ஓடும் ஓடைகளின் குறுக்கே, தடுப்பணைகள் அமைக்கும் பணி நடக்கிறது.கொல்லபட்டி சுற்றுப்பகுதி தென்னை மற்றும் காய்கறி சாகுபடி, தீவனபயிர் சாகுபடியும் நடக்கிறது. இப்பகுதியில் வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகு ஆழத்துக்கு சென்று விடுகிறது. கடந்த காலங்களில், நீரில்லாமல், பல இடங்களில் தென்னைகள் காய்ந்து வெட்டப்பட்டுள்ளன.எனவே, மழை காலங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், ஓடைகளின் குறுக்கே, தடுப்பணைகள் அமைக்க, கோரிக்கை வைக்கப்பட்டது. வேலை உறுதி திட்டத்தின் கீழ், இதற்கான நிதி பெறப்பட்டுள்ளது. தற்போது, மூன்று தடுப்பணைகள் கட்டும் பணி நடக்கிறது. அதில், ஒரு தடுப்பணை பணி நிறைவடைந்துள்ளது.தற்போது, புதிதாக மூன்று தடுப்பணைகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. மீதமுள்ள, மூன்று தடுப்பணைகள் விரைவில் அமைக்கப்படுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X