பொது செய்தி

தமிழ்நாடு

'நேத்து வச்ச மீன் குழம்பு!' ஒரு பிடிபிடிக்க வர்றீங்களா...

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 'நேத்து வச்ச மீன் குழம்பு!' ஒரு பிடிபிடிக்க வர்றீங்களா...

'நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் கத்திரிக்கா...நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா!' இந்த பாடல் வரிகளை கேட்கும்போதே பலருக்கும், நாக்கில் எச்சில் ஊறிவிடும்.'ஓட்டல் மீன்குழம்பு எல்லாம் சரிப்பட்டு வராது' என்பவர்களுக்காகவே, 'நேத்து வெச்சு மீன் குழம்பு' என்ற பெயரில் மண்மணம் வீச விருந்தளிக்கிறது, மங்கலம் ரோட்டிலுள்ள, ஓட்டல் ஜூனியர் சூர்யா.சிக்கன், மட்டன், பிஷ் பிரை என நான்வெஜ் சைடு டிஷ்கள் பட்டையை கிளப்புது. இங்கே ருசி கண்ட யாரும் ஒரு முறையோடு நிறுத்திவிடுவதில்லை. அனைவரும் ரெகுலர் கஸ்டமர்ஸ்தான். குறு மிளகு, சீரகம், மல்லியை தனியாக அரைத்து, வஞ்சிர மீனை அதில் பிரட்டி, கல்லில் தேங்காய் எண்ணெய்யில் பொரித்து தரும் கல்மீன் வறுவலுக்கு பலர் அடிமை. ஒரு நாள் முன் வெச்ச மீன் குழும்புக்கும் பேன்ஸ் ஜாஸ்தி.பெப்பர் சிக்கன், சிக்கன் லாலிபப், பிச்சுபோட்ட நாட்டுக்கோழி வறுவல், மட்டன் கறி பரோட்டோ, சிக்கன் கறி பரோட்டா, 'முட்டை லாபா' என, வந்தால் ஒரு ரவுண்டு வர எக்கச்சக்க ரகங்கள் உள்ளன. சிந்தாமணி, பள்ளிபாளையம், கொத்துக்கறி, பச்சைமிளகாய் வறுவல், கபாப், ரொட்டி, நாண் போன்ற தந்துாரி அயிட்டங்களும் ஏராளம்.அனைவருக்குமான, 'ஆல்டைம் பேவரைட்' ஆன கிரில்டு சிக்கன், சிக்கன் 777, பன் பரோட்டாக்கள் விற்பனை சூடுபறக்கிறது. இளநீர் பாயாசத்துக்கு தனி ரசிகர்கள் உண்டு. டோர் டெலிவரி சேவையும் உள்ளது.ஓட்டல் நுழைவாயிலில் தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை, ஹேண்ட் சானிடைசிங் செய்யப்படுகின்றன. ஒருவர் சாப்பிட்ட பின், அவரது மேஜை, கை கழுவுமிடம், கழிப்பிடம் ஆகியவை தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்யப்படுகிறது. இடைவெளி விட்டு, இருக்கை மற்றும் மேஜை அமைக்கப்பட்டுள்ளன.நேரம்: காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை: மாலை, 6:00 முதல் இரவு, 9:30 மணி வரை.தொடர்புக்கு: 77080 44844 0421 4203670

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X