சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோய் தொற்றுகூலி தொழிலாளி பலி

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

விழுப்புரம்; வளவனுார் அருகே கொரோனா நோய் தொற்றால் பாதித்த கூலி தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.வளவனுார் அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் ராஜேஷ்,36; கூலி தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுள்ள இவர், கடந்த 13ம் தேதி போதையில் தனது வீட்டு மொட்டை மாடியில் துாங்குவதற்காக சென்றார். படிகள் ஏறும் போது திடீரென தவறி கீழே விழுந்தார். பின்பக்க தலையில் காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்த போது, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கொரோனா தொற்று இருப்பதை உறுதிபடுத்தினர்.அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ், நேற்று முன்தினம் இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X