பொது செய்தி

தமிழ்நாடு

'நிவாரணம் வரவில்லை!' மாற்றுத்திறனாளி ஆதங்கம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:தமிழக அரசு அறிவித்தபடி, மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் வந்துசேர வில்லை என, பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கொரோனா ஊரடங்கால், மாற்றுத்திறனாளிகளுக்கும், 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. தேசிய அடையாள அட்டை வைத்துள்ளவர் பட்டியல், வருவாய்த்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 183 பயனாளிகளுக்கு, நிவாரண தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலரிடம், பட்டியல் மற்றும் நிவாரண தொகை வழங்கப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.பணிச்சுமை காரணமாக, கிராம நிர்வாக அலுவலர் வீடு வீடாக செல்வதில் தாமதம் ஏற்பட்டது. அதன்படி, அடையாள அட்டையுடன் வருவோருக்கு, கிராம நிர்வாக அலுவலகத்திலேயே, நிவாரண உதவி வழங்கப்படுகிறது. ஆனால், வீடு தேடி வருவர், என்று காத்திருந்த மாற்றுத்திறனாளிகள், உதவி கிடைக்கவில்லையென கூறுகின்றனர்.இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ''இதுவரை உதவி கிடைக்காதவர்கள், ஒரு போட்டோ, ரேஷன் கார்டு, அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் நகல்களுடன் சென்று, கிராம நிர்வாக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகள் செல்ல இயலாதபட்சத்தில், அவர்களை சார்ந்த யாராவது சென்று வாங்கி கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X