பொது செய்தி

தமிழ்நாடு

ஜமாபந்தி 'ஆன்லைன்' மனு பதிவு: வரும், 31 வரை அவகாசம் நீட்டிப்பு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஜமாபந்தி 'ஆன்லைன்' மனுக்கள் பதிவுக்கான அவகாசம், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக, வருவாய் கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தியும், 'டிஜிட்டல்' முறைக்கு மாறிவிட்டது. வருவாய் கிராமத்தின், 21 வகையான பதிவேடுகளை மட்டும், அதிகாரிகள் நேரில் சரிபார்த்து ஒப்புதல் அளித்துள்ளனர்.மக்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில், 'ஆன்லைன்' மூலம், ஜமாபந்தி மனுக்களை பதிவு செய்ய, தமிழக அரசு வசதி செய்துள்ளது. பொது 'இ-சேவை' மையங்களில் இலவசமாக மனுக்கள் பதிவு செய்யப்படுகிறது.கடந்த மாதம், 29 முதல் இம்மாதம் 15ம் தேதி வரை, பொதுமக்களிடம் இருந்து, ஜமாபந்தி மனுக்கள் 'ஆன்லைனில்' பெறப்பட்டன. 'ஆன்லைன்' பதிவில் பல்வேறு சிரமம் இருப்பதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தினர். கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, மனுக்கள் பதிவுக்கான அவகாசத்தை, 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜமாபந்தி மனுக்கள் பெறும் அவகாசம், 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. பொதுமக்கள் பதிவு செய்யும் மனுக்கள் மீது, கிராம நிர்வாக அலுவலர், ஆர்.ஐ., மற்றும் துணை தாசில்தார்கள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X