பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய திறனறி தேர்வில் செஞ்சி மாணவர்கள் முதல் இடம்

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

செஞ்சி; தேசிய திறனறி தேர்வில் மாவட்ட அளவில் முதல் இடம் பிடித்த செஞ்சி வட்டார மாணவர்களை மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டினார்.அரசு பள்ளிகளில் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய திறனறி தேர்வு நடத்துகின்றனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2018-19ம் ஆம் கல்வி ஆண்டில் செஞ்சி வட்டாரத்தை சேர்ந்த 35 மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஒருங்கிணைந்த விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்தனர்.2019-20 ஆம் கல்வி ஆண்டு 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்வில் செஞ்சி வட்டாரத்தை சேர்ந்த 56 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டும் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்தனர். சேரானுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.செஞ்சி டி.இ.ஓ., நடராஜன், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டினார். தேர்ச்சிக்கு பாடுபட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களை பாராட்டினார்.ஏ.இ.ஓ.,க்கள் அக்சிலியம் பெலிக்ஸ், கோவிந்தராஜன், மேற்பார்வையாளர் லட்சுமிநாராயணன், பள்ளி துணை ஆய்வாளர் வினாயகமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X