தமிழ்நாடு

'சத்தான உணவில்லை!'கொரோனா நோயாளிக்கு நெருக்கடி :மாவட்ட நிர்வாகம் தலையிடுமா?

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 23, 2020
Share
Advertisement
 'சத்தான உணவில்லை!'கொரோனா நோயாளிக்கு நெருக்கடி :மாவட்ட நிர்வாகம் தலையிடுமா?

திருப்பூர்:மாவட்டந்தோறும் முதற்கட்ட அறிகுறியோடு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லுாரி, ஐ.சி.யு., வசதி கொண்ட தனியார் மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆனால், நாளுக்கு நாள், நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.சுழற்சி முறையில், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட்டாலும், திணறி வருகின்றனர்.

இதன் காரணமாக, முதற்கட்ட அறிகுறி நோயாளிகளுக்கு, அந்தந்த தாலுகா அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அவ்வகையில், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் முதற்கட்ட அறிகுறியோடு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்கு சரிவர ஊட்டசத்து உணவு வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.அரசு செவிலியர்கள் கூறியதாவது: முதற்கட்ட அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த பகுதி தாலுகா அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மூச்சு திணறல், சளி, சர்க்கரை நோய் போன்று அதிக பாதிப்புடன் வரும் கொரோனா தொற்று நோயாளிகள் ஐ.சி.யு., பிரிவுக்கு மாற்றப்படுகின்றனர்.ஆனால், டாக்டர்கள், செவிலியர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்யப்படுவதில்லை.அதேபோல், தாலுகா மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதில்லை. அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள், நிதியை கேட்டு பெறுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X