தமிழ்நாடு

சிக்கல் ; நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில்...மாவட்டத்தில் 5 ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ள அவலநிலை

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி; விழுப்புரம் மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பாதித்தவர்களை குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்வதில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

கூடுதல் ஆம்புலன்ஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்திலிருந்து மூன்று இலக்கத்திற்கு சென்றுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் விழுப்புரம் , திண்டிவனம் நகராட்சி உட்பட விக்கிரவாண்டி, கண்டமானடி, காணை, சிறுவந்தாடு, மயிலம், மேல்சித்தாமூர், கிளியனுார், திருவெண்ணெய்நல்லுார், முகையூர், மரக்காணம், மேல்மலையனுார், சத்தியமங்கலம், ஒலக்கூர் உட்பட 13 வட்டார மருத்துவ மனைகள் செயல்பட்டு வருகின்றன.மாவட்டத்தில் பெரும்பகுதி கிராமப்புறங்களை கொண்டதாகும். தற்பொழுது நோய் தொற்று பரவல் நகரப்பகுதிகளுக்கு இணையாக கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று நகரப் பகுதிகளில் குறைந்தும் கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்தால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்ல 5 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே உள்ளது. இதில் அய்யூர் அகரம் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 4 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இயங்கி வருகிறது.நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வர (102 ஆம்புலன்ஸ்) தாய்சேய் நல பிரிவிலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. ஆக 7 ஆம்புலன்ஸ்களில் ஒரு ஆம்புலன்ஸ் தவிர 6 ஆம்புலன்ஸ்களில் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வருவது சிரமமாக உள்ளது. இதனால் கால தாமதம் ஏற்படுகிறது. முதலில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, ஆம்புலன்ஸ்கள் அங்கு சென்று அழைத்து வருகின்றனர்.

கிராமப்புறங்களில் ஒருவர் அல்லது இருவர் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களை அழைத்து வர கால தாமதம் ஏற்படுவதால் நோய் தொற்று பகுதிகளுக்கு செல்லும் கண்காணிப்பு குழு அதிகாரிகளிடம் கிராமப்புற மக்கள் ஏன் உடனடியாக அழைத்து செல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் . 13 வட்டாரம் மற்றும் இரண்டு நகராட்சிகள் உட்பட 15 பகுதிகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. நோய் தொற்று முதல் நாள் மாலை 4:00 மணியளவில் உறுதி செய்யப்பட்டால் , அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மறுநாள் மதியம் 1:00 மணியளவில் ஆம்புலன்ஸ் வந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்வதால் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் . நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு குழு அதிகாரிகள்,ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ,டாக்டர்கள் பணியை பொதுமக்கள் கருத்தில் கொள்ளாமல் .தொற்றால் பாதிக்கப்பட்டவர் என்ற சிந்தனை மட்டுமே கவனத்தில் வைத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இது போன்ற நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம், நகராட்சி, வட்டாரத்திற்கு தலா ஒரு ஆம்புலன்ஸ் என கூடுதலாக ஆம்புலன்ஸ்களை பெற்றால் மட்டுமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து சென்று தனிமை படுத்த முடியும்.எனவே விழுப்புரம் மாவட்ட மக்களின் நிலையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் ஆம்புலன்ஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X