இந்தியா

பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வெங்கட்டா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரெஜினா பேகம்,60. டில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவரால் புதுச்சேரிக்கு திரும்பமுடியவில்லை.அவரது வீட்டை, அதே பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் அவ்வப்போது கவனித்து வந்தார். நேற்று முன்தினம் ஜெயச்சந்திரன் வீட்டினை பார்க்க சென்றபோது, முன்கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த நகை, பணம் திருடு போனது தெரிய வந்தது.தகவலறிந்த கிழக்கு எஸ்.பி.,மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ரெஜினா பேகம் வீடு நீண்ட நாட்களாக பூட்டி கிடைப்பதை நோட்டமிட்ட கொள்ளையர் பூட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர். ரெஜினா பேகத்தை மொபைலில் தொடர்பு கொண்ட போலீசார், திருடு போன நகை மற்றும் பணத்தின் விபரம் கேட்டுள்ளனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில் இரு வாலிபர்கள் பைக்கில் சுற்றி வந்தது தெரிய வந்துள்ளது, அவர்களை பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X