அதிகரிக்கும் பாலியல் வழக்கு: விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் பாலியல் வழக்கு: விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே!

Added : ஜூலை 23, 2020
Share
அவிநாசி:கிராமப்புறங்களில், பாலியல் வழக்கு தவிர்ப்பு தொடர்பான, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநிலத்தின் பல இடங்களில், குறிப்பாக, கிராமப்புறங்களில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள், சமீபகாலமாக அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் அதிகளவில் பதிவு

அவிநாசி:கிராமப்புறங்களில், பாலியல் வழக்கு தவிர்ப்பு தொடர்பான, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநிலத்தின் பல இடங்களில், குறிப்பாக, கிராமப்புறங்களில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள், சமீபகாலமாக அதிகமாக பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக, குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தன்னார்வலர்கள் சிலர் கூறியதாவது:முந்தைய காலங்களில், அந்தந்த எல்லைக்குட்பட்ட மகளிர் போலீசார் சார்பில், கிராமங்கள் தோறும் பாலியல் குற்றங்களை தவிர்ப்பது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.அவ்வப்போது, கிராம மக்களை ஒன்றிணைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாலியல் தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.ஆனால், சில மாதங்களாக இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகளவில் பதிவு செய்யப்படுகின்றன.தற்போது, ஊரடங்கு விதிமுறை அமலில் உள்ள நிலையில், பாலியல் தொடர்பான குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா சூழலில், கூட்டம் நடத்துவது வாய்ப்பில்லை என்ற நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X