இந்தியா

பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

Added : ஜூலை 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி, மூலக்குளம் ஜே.ஜே.நகர் பிலபாங் சர்வதேச மேல்நிலைப் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.சாம்பால் கல்வி நிறுவனங்களின் கூடுதல் இயக்குனர் குமரவேல், பள்ளி முதுநிலை முதல்வர் முனைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர், சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை புரிந்த மாணவிகள் வினிஷா, கவுதம், சுகானி,ஆகியோருக்கு பரிசு வழங்கி, பாராட்டினர். பள்ளியின் முதுநிலை முதல்வர் முனைவர் ஆரோக்கியராஜ் கூறியதாவது:பிலபாங் பள்ளியில், மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமைத்திறனுக்கான அனைத்து பயிற்சிகளும் மகிழ்ச்சியான கற்றல் கொள்கை அடிப்படையில் மிகச் சிறப்பாக வழங்கப்படுகிறது.சரியான ஆசிரியர் - மாணவர் விகிதம், ஒவ்வொரு வகுப்பிலும் கூடுதல் இணை ஆசிரியர், நீச்சல், கராத்தே, ஸ்கேட்டிங், மேற்கத்திய இசை, நடனம் மற்றும் வாழ்க்கைத் திறன் சார்ந்த பல்வேறு பயிற்சிகளுடன் மிகத் தரமான கல்வி வழங்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளியில் நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை பிளஸ் 1 வகுப்பில் உயிரியல், கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது. சர்வதேச தரம் வாய்ந்த அனைத்து வசதிகளுடன் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை பள்ளி வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X