அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் கண்டிக்காதது ஏன்? பா.ஜ., தலைவர் முருகன் கேள்வி

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 23, 2020 | கருத்துகள் (65)
Share
Advertisement
DMk, BJP, Stalin, Murugan, திமுக, பாஜ, ஸ்டாலின், முருகன்

சென்னை : ''கருப்பர் கூட்டத்துக்கு பின்புலமாக தாங்கள் இல்லை என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும்'' என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் தெரிவித்தார்.

மாற்றுகட்சியினர் பா.ஜ.வில் இணைந்த நிகழ்வில் வெற்றிவேல் முருகா' என்ற அலைபேசி காலர் டியூன்' வெளியிடப்பட்டது.பின் முருகன் அளித்த பேட்டி: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சமூக நீதி குறித்து பேசுகிறார். அவர் கட்சி எம்.பி.க்கள் தலைமை செயலரை சந்தித்துவிட்டு 'நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா' என கேட்டனர். அவரது கட்சி நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் நீதிபதிகளாக உயர்ந்ததை கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார். இவைகள் குறித்து ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

சமூக நீதி குறித்து பேச தி.மு.க.விற்கு எவ்வித அருகதையும் கிடையாது.தமிழர்கள் வீடுகளில் தினமும் காலையில் ஒலிப்பது கந்த சஷ்டி கவசம்.அதை கருப்பர் கூட்டம் ஆபாசமாக பேசியது. நடிகர்கள் சரத்குமார், ரஜினி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகள் கண்டனம் தெரிவிக்க தயங்கின.ஸ்டாலின் இன்று வரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

கருப்பர் கூட்டத்திற்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்க வேண்டும். கருப்பர் கூட்டம் சேனலை முடக்க வேண்டும். வீடியோ வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு பின்புலமாக இருப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh G - Hyderabad,இந்தியா
25-ஜூலை-202019:17:00 IST Report Abuse
Ganesh G ஒரு சிலை மட்டுமா வச்சிருக்காங்க. தமிழ்நாடு மட்டுமில்லை கேரளத்திலும் தமிழக அரசு சார்பில் சிலை வைத்து அரசு செலவில் பராமரித்து வருகிறார்கள். தமிழ்நாடு மொத்தம் எத்தனை சிலை வச்சிருக்காங்க, அதுக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று தேடிப்பார்த்தால் செம்மொழி மாநாடு நடத்தின மாதிரி ஊழல் பண்ணி இருப்பார்கள் இந்த தி.மு.க. காரர்கள். பெரியாரின் இந்த யுனெஸ்கோ விருது கலைஞரின் ஸ்டாம்ப் மாதிரி அவுங்களாகவே கொடுத்துக்கிட்ட விருதாமே. அதுவும் தென் கிழக்கு ஆசியாவில் இந்தியா வரவே வராதாம்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
25-ஜூலை-202000:30:23 IST Report Abuse
konanki கயவர் கூட்டம் அமைப்பு தீய சகதி பிரைவேட் கம்பெனியொட அஸஸொயிட் அமைப்பு. சென்னை மயிலாப்பூர் விம் தெருவில் உள்ள ஆபீஸ் ஸ்டுடியோ எல்லாம் இன்னொரு குரூப் கம்பனியொட நிதியில் நிறுவப்பட்டது. இது இல்லாமல் கயவர் கூட்டம் கிங்பின் (இன்னும் கைது செய்யவில்லை . அரசியல் வாதிகள் அதிகாரிகள் போலீஸ் நீதித்துறை எல்லோருக்கும் பயமா? என்று மக்கள் பேச்சு) மூலம் வரும் ஹவாலா பணம். இதை எல்லாம் பின்னால் இருந்து இயக்குவது சேனல் நெறியாளர் மற்றும் அவர் உறவினர் மற்றும் ஆலோசகர். இந்த லட்சணத்தில் எப்படி கண்டனம் தெரிவிப்பார். தமிழக அரசியிலில் சிறு குழந்தைக்கு கூட இதெல்லாம் தெரிந்த விஷயம்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
24-ஜூலை-202023:47:38 IST Report Abuse
konanki மானை சுட்டதினால் சல்மான் கானுக்கு தண்டனை.சின்ன மேளத்திற்கு மான் கறி பிடிக்கும் என்று மான் சுட்டு குடுத்த குடும்ப அடிமைக்கு 2021 தேர்தலில் சீட் கான்பார்மடு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X